இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்கான ஸ்டார்ட் அப் ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியமும்-இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன

Posted On: 09 APR 2024 5:03PM by PIB Chennai

மின்சார வாகனங்களின் பேட்டரி மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் பணிபுரியும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான விருப்ப வெளிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இன்று அறிமுகம்  செய்தன. தூய்மையான மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறையில் ஐரோப்பிய மற்றும் இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இடையிலான  ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் உத்தேசப் பரிமாற்றம் என்பது, அரிய பொருட்களின் சுழற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டிலும் கார்பன் சமநிலையை நோக்கி மாறுவதற்கும் கருவியாக இருக்கும். இந்த முயற்சி 2022, ஏப்ரல் 25 அன்று புதுதில்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலையான நிகழ்ச்சி நிரலை ஊக்குவித்தல், புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல், வலுவான பொருளாதார உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இந்த நிகழ்வின் சிறப்பம்சங்கள்: (i) மின்சார வாகனத்திற்கான பேட்டரி மறுசுழற்சி தொழில்நுட்பங்களின் துறையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் / சிறு, நடுத்தர தொழில்துறைகளை அடையாளம் காணுதல், ஆதரித்தல் மற்றும் ஊக்குவித்தல்; (ii) ஒத்துழைப்பை எளிதாக்குதல், வர்த்தக வாய்ப்புகளை ஆராய்தல், வாடிக்கையாளர் உறவுகளை ஆழப்படுத்துதல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் / சிறு, நடுத்தர தொழில்துறைகளுக்கான முதலீட்டு வழிகளை ஆராய்தல்.

"தொழில்துறை விரிவாக்கத்தை இயக்கும் பேட்டரி மறுசுழற்சி தீர்வுகளை கூட்டாக உருவாக்க ஐரோப்பிய ஒன்றிய கண்டுபிடிப்பாளர்களுடன் முயற்சிகளை ஒருங்கிணைப்பதே எங்கள் நோக்கம். நிலைத்தன்மை, புதிய கண்டுபிடிப்பு ஆகியவை செழிப்பான சுழற்சிப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். ஒரு கூட்டுச் சூழலை வளர்ப்பதற்கு நாங்கள் அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம்" என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் கூறினார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் 2024 ஏப்ரல் 30-க்குள் தங்களின் விருப்ப வெளிப்பாடுகளை  சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

நிகழ்வு மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்கள் https://www.psa.gov.in/india-eu-ttc#india-eu-ttc-eoi

https://www.eeas.europa.eu/delegations/india/eu-india-electrical-vehicle-battery-recycling-technologies-exchange-2024_en

என்ற இணையதளங்களைப் பார்வையிடலாம்.

-----

ANU/AD/SMB/KPG/KV/DL


(Release ID: 2017548) Visitor Counter : 122