குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா பண்டிகைகளையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 08 APR 2024 5:51PM by PIB Chennai

உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா ஆகிய புனிதமான பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

இந்தத் திருவிழாக்கள் வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகின்றன என்றாலும், அதன் மையப்பொருள் மகிழ்ச்சி என்பதாகும். நமது தேசத்தின் பல்வேறு முனைகளில் பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை இவை குறிக்கின்றன. மேலும் நம்பிக்கை, செழிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றன. இந்தப் பண்டிகைகளை நாம் கொண்டாடும்போது, பாரதத்தின் கட்டமைப்பை வரையறை செய்யும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பிரதிபலிப்போம்.

இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும்.

.***

SM/SMB/RS/KRS


(रिलीज़ आईडी: 2017457) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Kannada