பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் இந்திய கடற்படையின் பகுதி தூர மாரத்தான்

இடுகை இடப்பட்ட நாள்: 08 APR 2024 5:26PM by PIB Chennai

இந்தியக் கடற்படை 2024 அக்டோபர் 06 அன்று புதுதில்லியில் பகுதி தூர மாரத்தான் போட்டியை நடத்துவதை பெருமையுடன் அறிவித்துள்ளது.  நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்களுடன் கடற்படையினரின் நட்புணர்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாரத்தான் ஓட்டம் பங்கேற்பாளர்களிடையே சிறந்த உடல்நலனை பராமரிப்பதையும் தங்கள் வாழ்க்கையில் உடற்பயிற்சியை மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் அமையவுள்ளது.

இந்தப் பகுதி தூர மாரத்தான் போட்டி 21.1 கி.மீ. தொலைவிற்கும், 10 கி.மீ., 5 கி.மீ தொலைவிற்கும் நடத்தப்படவுள்ளது.  இதற்கான பதிவு 2024 ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

***

SM/IR/AG/RR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2017447) வருகையாளர் எண்ணிக்கை : 125
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी