குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சிறந்த தலைமைத்துவம் என்பது சமரசத்துக்கு அப்பாற்பட்டது - புத்த கயாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) 6-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் உரை

Posted On: 07 APR 2024 4:46PM by PIB Chennai

நெறிமுறையற்ற குறுக்கு வழிகளுக்கு இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புத்த கயாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) 6வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அவர் உரையாற்றினார்.

நெறிமுறைகளுடன் கூடிய சிறந்த தலைமைத்துவம் சமரசத்துக்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறினார். இந்தியாவின் எதிர்காலத்தின் வழிகாட்டிகளாக இந்த மேலாண்மை நிறுவன மாணவர்கள் திகழ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் வளம் மற்றும் இறையாண்மைக்கு பொருளாதார சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.  உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்பதை ஒரு தேசிய நடைமுறையாக பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு செய்வதன் மூலம், நமது அந்நியச் செலாவணி கையிருப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றம் ஏற்படும் என்று திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், புத்த கயா ஐஐஎம்  தலைவர் திரு உதய் கோட்டக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

SM/PLM/DL


(Release ID: 2017437) Visitor Counter : 75