எரிசக்தி அமைச்சகம்
15 ஜிகாவாட் மொத்த திறன் கொண்ட நீர்மின் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன
Posted On:
05 APR 2024 7:17PM by PIB Chennai
நாட்டில் மொத்தம் 15 ஜிகாவாட் திறன் கொண்ட நீர்மின் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன.
நடப்பு நிதியாண்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள நீர்மின் திட்டங்கள் பனி உருகுதலின் பங்களிப்பிலிருந்து அடிப்படை ஓட்டத்தைப் பெறுகின்றன. எனவே, வெப்பநிலை அதிகரிப்பு பனி உருகுவதற்கான பங்களிப்பை அதிகரிக்கும்.
நாட்டில் தற்போது, 2.7 ஜிகாவாட் மொத்த திறன் கொண்ட நீர்மின் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன, மேலும் 50 ஜிகாவாட் மின்னுற்பத்தித் திட்டங்கள் பல்வேறு கட்ட கட்டுமான நிலையில் உள்ளன.
2024-25 நிதியாண்டில் நல்ல பருவமழை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு, தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு அதிகரிப்பு, முந்தைய ஆண்டில் குறைவான மழைப்பொழிவின் போது இழந்த நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை மீண்டும் நிரப்புவதற்கு பங்களிக்கக்கூடும்.
***
SM/SMB/RS/DL
(Release ID: 2017282)