பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பங்களாதேஷ் மீனவர்கள் 27 பேரை மீட்ட இந்தியக் கடலோர காவல்படை, அவர்களை பங்களாதேஷ் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது

Posted On: 05 APR 2024 6:36PM by PIB Chennai

இந்தியக் கடலோரக் காவல்படை 2024, ஏப்ரல் 4 அன்று கடலில் மீன்பிடி படகில் தத்தளித்த 27 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது. அன்று காலை 11.30 மணியளவில், இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச கடல்சார் எல்லைக் கோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான அமோக், பங்களாதேஷ் மீன்பிடி படகு சாகர் II இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் படகில் கடந்த 2 நாட்களாக ஸ்டீயரிங் கியரில் பழுது ஏற்பட்டு அதில் இருந்தவர்கள் தத்தளித்து வருவதும், அதனால் படகு இந்திய கடல் எல்லைக்குள் கவிழ்ந்ததும் தெரியவந்தது. இந்தப் படகில் 27 பணியாளர்கள் / மீனவர்கள் இருந்தனர்.

 

இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை பிராந்திய தலைமையகம் பங்களாதேஷ் கடலோர காவல்படையுடன் தகவல்தொடர்புகளை ஏற்படுத்தி, சம்பவம் மற்றும் செயல் திட்டம் குறித்து அவர்களுக்குத் தகவல் அளித்தது. பங்களாதேஷ் கடலோரக் காவல்படைக் கப்பல் கமருஸ்ஸமான், படகை இழுத்துச் செல்வதற்காக பங்களாதேஷ் கடலோரக் காவல்படையால் நிறுத்தப்பட்டது. பின்னர் 2024, ஏப்ரல் 4 அன்று மாலை 6.45 மணியளவில் பங்களாதேஷ் மீனவர்களையும் அவர்களின் படகையும் இந்தியக் கடலோரக் காவல்படை, பங்களாதேஷ் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது.

***

SM/SMB/RS/DL


(Release ID: 2017278) Visitor Counter : 105