பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ மருத்துவ படைப் பிரிவின் 260-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 04 APR 2024 12:25PM by PIB Chennai

ராணுவ மருத்துவப் படைப் பிரிவின் 260-வது நிறுவன தினம் நேற்று (03.04.2024) கொண்டாடப்பட்டது. 1764-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பிரிவு, நூற்றாண்டுகளுக்கும் மேலாக முன்னேற்றம், வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, போர்க் காலங்களிலும் அமைதிச் சூழலிலும் தேசத்திற்கு தன்னலமற்ற சேவை வழங்கி வருகிறது.

புதுதில்லியில் நடைபெற்ற 260-வது மருத்துவப் படைப்பிரிவு நிறுவன தின நிகழ்ச்சியின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மருத்துவப் பிரிவின் சிறப்பான சாதனைகளை நினைவுகூரும் வகையில் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  700-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பிரிவின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

-----

ANU/SM/PLM/KPG/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2017144) வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati