சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் நிதியாண்டில் சுரங்கத் துறை சாதனை உற்பத்தியைக் கண்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 APR 2024 7:42PM by PIB Chennai

2024 பிப்ரவரி மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 139.6 ஆக இருந்தது. இது 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 8.0% அதிகமாகும். 2024-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 11 மாத காலத்திற்கான இந்தக் குறியீட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 8.2% அதிகமாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 2024 பிப்ரவரி மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் சில எரிபொருள் அல்லாத தாதுக்கள் பாக்சைட், குரோமைட், செறிவூட்டப்பட்ட தாமிரம், தங்கம், செறிவூட்டப்பட்ட துத்தநாகம், மாங்கனீசு தாது, பாஸ்போரைட், வைரம், கிராஃபைட், சுண்ணாம்புக்கல், மேக்னசைட் போன்றவையாகும்.

இந்தியா உலகின் 2-வது பெரிய அலுமினியம் உற்பத்தியாளராகவும், 3-வது பெரிய சுண்ணாம்பு உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது. இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான வளர்ச்சி, எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற பயனீட்டுத் தொழில்களின் வலுவான தேவை நிலைமைகளைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017085

-----

(Release ID: 2017085)

ANU/AD/IR/KPG/KV


(रिलीज़ आईडी: 2017126) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi