சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் ஐபோன் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது

Posted On: 03 APR 2024 6:20PM by PIB Chennai

எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் ஐபோன் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதனை புதுதில்லியில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா தொடங்கிவைத்தார்.  மத்திய அரசு சுகாதாரத் திட்ட பயனாளிகளுக்கான மின்னணு சுகாதார பதிவுகள், தகவல்கள் அணுகலை மேம்படுத்தி இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர், எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் ஐபோன் செயலி, சுகாதார சேவைத் துறையில் அவசியமான ஒன்று என்று கூறினார். இது மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு அத்தியாவசிய சுகாதார அம்சங்களை அவர்கள் எளிதில் அணுகுவதற்கு அதிகாரம் அளிக்கிறது என்று தெரிவித்தார். இந்த முயற்சி சுகாதார சேவைகளின் தரம் மற்றும் அணுகலை பயன்படுத்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தச் செயலி இமாச்சலப் பிரதேச தேசிய தகவல் மையம்  மற்றும்  தேசிய தகவல் மைய சுகாதார தொழில்நுட்ப குழுக்களால் உருவாக்கப்பட்டது. இது மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு தகவல் மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அம்சங்களை வழங்கும் வசதியான மொபைல் செயலியாகும்.  இந்த செயலி தற்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் தளங்களிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017072

-----

ANU/AD/IR/KPG/KV


(Release ID: 2017123) Visitor Counter : 112