சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெப்பத்தால் ஏற்படும் நோய்த் தடுப்பு மேலாண்மைக்கான பொது சுகாதார தயார்நிலையை டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்

Posted On: 03 APR 2024 5:29PM by PIB Chennai

"வெப்பத்தால் ஏற்படும் நோய்த் தடுப்பு மேலாண்மைக்கான பொது சுகாதார தயார் நிலையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அப்போது அவர் தெரிவித்தார். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துல்லியமான தரவு இல்லாததை சுட்டிக்காட்டிய டாக்டர் மாண்டவியா, உயிரிழப்புகள் மற்றும் சிகிச்சைப் பெறுபவர்கள் உள்ளிட்ட வெப்ப அலைகள் குறித்த கள அளவிலான தரவைப் பகிர்ந்து கொள்ள மாநிலங்களின் உள்ளீடுகளுடன் ஒரு மத்திய தரவுத்தளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கை கிடைத்தவுடன் உரிய நேரத்தில்  மாநிலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறினார். ஐஎம்டி எச்சரிக்கைகள் கிடைத்தவுடன் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். "தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே சரியான நேரத்தில், முன்கூட்டியே விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்  வெப்ப அலைகளால் ஏற்படும் கடுமையான தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

வெப்பம் தொடர்பான நோய்களை தடுப்பதில்  கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலுக்காக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுமாறு உயர் அதிகாரிகளை மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார்.

------

 
ANU/AD/IR/KPG/KRS


(Release ID: 2017108) Visitor Counter : 120