எரிசக்தி அமைச்சகம்

நீடித்த வளர்ச்சி இலக்குகளில் கவனம் செலுத்தும் வகையில் எரிசக்தித் துறையில், தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனமும் பிடிசி இந்தியா நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன

Posted On: 30 MAR 2024 12:50PM by PIB Chennai

தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனமும் (NPTI - என்பிடிஐ), பவர் டிரான்ஸ்ஃபர் கார்ப்பரேஷன் (PTC) இந்தியா நிறுவனமும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு, எரிசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் ஒன்றை உருவாக்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளின் பயன்கள் மின்துறைக்கு பரவலாக கிடைக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், என்பிடிஐ மற்றும் பிடிசி இந்தியா ஆகியவை இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வை சிறப்பு மையத்தின் மூலம் மேற்கொள்ளும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுதில்லியில் உள்ள மின்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (2024 மார்ச் 28) கையெழுத்தானது. இதில் என்டிபிஐ தலைமை இயக்குநர் டாக்டர் திரிப்தா தாக்கூர் மற்றும் பிடிசி இந்தியா லிமிடெட் மனித வளப் பிரிவு மூத்த துணைத் தலைவர்  ஆகியோர் கையெழுத்திட்டனர். மத்திய மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. பங்கஜ் அகர்வால் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2016701) Visitor Counter : 62


Read this release in: English , Urdu , Hindi , Odia