பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தர உத்தரவாத தலைமை இயக்குநரகத்தை மறுசீரமைப்பதற்கான அறிவிக்கையை பாதுகாப்பு உற்பத்தி துறை வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 28 MAR 2024 1:08PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடையும் வகையிலும், 'வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையிலும் ஒரு பெரிய சீர்திருத்தமாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள  பாதுகாப்பு உற்பத்தித் துறை, தர உத்தரவாத செயல்முறைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தர உத்தரவாத தலைமை இயக்குநரகத்தை மறுசீரமைப்பதற்கான  அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது. 

ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் புதிய பாதுகாப்பு நிறுவனங்களாக வணிகமயமாக்கப்பட்டதாலும், தனியார் பாதுகாப்புத் தொழில்துறையின் அதிகரித்த பங்களிப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கலை நோக்கி அரசின் உத்வேகத்தாலும், வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தித் தொழிலுக்கு பயனுள்ள மற்றும் திறமையான ஆதரவுக்காக தலைமை இயக்குநரகத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது. பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் தீவிர விவாதங்களுக்குப் பிறகு இந்த செயல்பாட்டு சீர்திருத்தங்கள் வழிநடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2016542

***

PKV/RS/KV

 


(रिलीज़ आईडी: 2016552) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu