நிதி அமைச்சகம்
2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான அரசின் கடன் பெறும் திட்டம்
प्रविष्टि तिथि:
27 MAR 2024 5:40PM by PIB Chennai
2024-25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான கடன் பெறும் திட்டத்தை மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இறுதி செய்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் 2024-25-ம் நிதியாண்டில் திட்டமிடப்பட்ட ரூ.14.13 லட்சம் கோடி மொத்த சந்தை கடனில் ரூ.7.50 லட்சம் கோடி (53.08%) முதல் அரையாண்டில் தேதியிட்ட பத்திரங்கள் மூலம் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தங்க பசுமை பத்திரங்கள் வழங்குவதன் மூலம் ரூ. 12,000 கோடி அடங்கும். சந்தை கருத்துக்களின் அடிப்படையிலும், உலகளாவிய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்பவும், 15 ஆண்டு தவணைக்காலத்தின் புதிய தேதியிட்ட பங்குகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
26 வாராந்திர ஏலங்கள் மூலம் ரூ.7.50 லட்சம் கோடி மொத்த சந்தை கடன் நிறைவடையும். சந்தைக் கடன் 3, 5, 7, 10, 15, 30, 40 மற்றும் 50 ஆண்டு பத்திரங்களில் இடம்பெற்றுள்ளது. வெவ்வேறு முதிர்வுகளின் கீழ் கடன் வாங்கும் பங்கு: 3 ஆண்டு (4.80%), 5 ஆண்டு (9.60%), 7 ஆண்டு (8.80%), 10 ஆண்டு (25.60%), 15 ஆண்டு (13.87%), 30 ஆண்டு (8.93%), 40 ஆண்டு (19.47%) மற்றும் 50 ஆண்டு (8.93%).
***
PKV/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2016511)
आगंतुक पटल : 217