சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 ஜனவரியில் நாட்டின் கனிம உற்பத்தி 5.9% வளர்ச்சியடைந்தது

Posted On: 20 MAR 2024 12:21PM by PIB Chennai

2024 ஜனவரி மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12=100) 144.1 ஆக உள்ளது. இது 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 5.9% அதிகமாகும். இந்திய சுரங்க அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல்-ஜனவரி, 2023-24 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 8.3% சதவீதமாகும்.     

2024 ஜனவரியில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 998 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 41 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 3073 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 2426 ஆயிரம் டன், குரோமைட் 251 ஆயிரம் டன், தாமிரம் 12.6 ஆயிரம் டன், தங்கம் 134 கிலோ கிராம், இரும்புத் தாது 252 லட்சம் டன், மாங்கனீசு தாது 304 ஆயிரம் டன், துத்தநாகம் 152 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 394 லட்சம் டன், பாஸ்போரைட் 109 ஆயிரம் டன், மேக்னசைட் 13 ஆயிரம் டன்.

ஜனவரி 2023 ஐ விட ஜனவரி, 2024 -ல் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான கனிமங்கள் பின்வருமாறு: மேக்னசைட் (90.1%), நிலக்கரி (10.3%), சுண்ணாம்புக்கல் (10%), பாக்சைட் (9.8%), மாங்கனீசு தாது (7.8%), இயற்கை எரிவாயு (U) (5.5%),  இரும்புத் தாது (4.3%), பழுப்பு நிலக்கரி (3.6%), துத்தநாகம். (1.3%), மற்றும் பெட்ரோலியம் (கச்சா) (0.7%). எதிர்மறை வளர்ச்சியைக் காட்டும் பிற முக்கிய தாதுக்களில் தங்கம் (-23.4%), குரோமைட் (-35.2%) மற்றும் பாஸ்போரைட் (-44.4%) ஆகியவை அடங்கும்.

***

PKV/IR/RS/KRS


(Release ID: 2015662) Visitor Counter : 100