பாதுகாப்பு அமைச்சகம்
2022-ம் ஆண்டிற்கான ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் சிறந்த மற்றும் இரண்டாவது சிறந்த ராணுவ மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு அமைச்சர் கோப்பை வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
19 MAR 2024 5:22PM by PIB Chennai
2022-ம் ஆண்டிற்கான ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கிய முதல் மற்றும் இரண்டாவது சிறந்த ராணுவ மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு அமைச்சர் கோப்பையை 2024, மார்ச் 19 அன்று புதுதில்லியில் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் இயக்குநர் ஜெனரல் மற்றும் ராணுவ மருத்துவப் படையின் உயர் கர்னல் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் வழங்கினார். ராணுவ மருத்துவமனை (தெற்கு), புனே மற்றும் ராணுவ மருத்துவமனை (மத்திய), லக்னோ முறையே 2022-ம் ஆண்டிற்கான மற்றும் இரண்டாவது சிறந்த ராணுவ மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ராணுவ நடவடிக்கைகளின் போதும், அமைதி காலத்திலும் மருத்துவ உதவி வழங்குவதில் உள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள ஆயுதப்படை மருத்துவச் சேவை தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
***
SM/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2015591)
आगंतुक पटल : 133