வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
காப்புரிமை அலுவலகம் ஓராண்டில் ஒரு லட்சம் காப்புரிமைகளை வழங்கியுள்ளது
Posted On:
16 MAR 2024 6:39PM by PIB Chennai
காப்புரமை விதிகள், 2024 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த விதிகள் காப்புரிமைகளைப் பெறுதல் மற்றும் நிர்வாக செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். இதன் மூலம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உகந்த சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
நாட்டில் அறிவுசார் சொத்துரிமை சூழல் அமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது
காப்புரிமைகள்:
ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒரு தொழில்நுட்பம் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை நாடுகிறது. 2023-ம் ஆண்டில், எல்லா நேரத்திலும் அதிகபட்சமாக 90300 காப்புரிமை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காப்புரிமை அலுவலகம் கடந்த ஒரு வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வேலை நாளிலும், 250 காப்புரிமைகள் வழங்கப்பட்டன.
புவிசார் குறியீடுகள்:
புவிசார் குறியீடு (ஜிஐ) பதிவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் இந்தியாவில் 573 புவிசார் குறியீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், 98 புதிய புவிசார் குறியீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,
அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு:
கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு இயக்கமான என்ஐபிஏஎம் (NIPAM), 24 லட்சம் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை பயிற்சியை வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2015234
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2015261)
Visitor Counter : 89