சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கனிம வளங்களை ஆராய்தல்: முக்கியமான கனிம வள ஆதார ங்களில் ஆய்வு உரிமங்களை வழங்குவதற்காக மாநில அரசுகள் என்.ஐ.டி.க்களை வெளியிட்டுள்ளன

Posted On: 15 MAR 2024 11:13AM by PIB Chennai

கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஆய்வு உரிமத்தை  ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நாட்டில் உள்ள 29 முக்கியமான மற்றும் ஆழமான கனிமங்களின் ஆய்வு மற்றும் சுரங்க  நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்காக, 17.08.2023 முதல் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 7-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கனிமங்களுக்கு ஏலத்தின் மூலம் ஆய்வு உரிமம் வழங்கப்படலாம். கனிம திருத்த விதிகள், 2024 மூலம் ஆய்வு உரிமம் வழங்குவதற்கான செயல்முறை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் 2024 மார்ச் 6-ம் தேதி முக்கியமான கனிமங்களுக்கான ஆய்வு உரிமம் ஏலத்தை அறிவித்தன. கர்நாடகா ராய்ச்சூர் மற்றும் யாதகிரி மாவட்டங்களில் தங்கம், தாமிரம் மற்றும் லித்தியம் ஆகியவற்றின் ஒரு தொகுதிக்கான ஏலம் தொடங்கியது. ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், ஹனுமன்கர், சுரு, பிகானேர், ஸ்ரீ கங்காநகர், ஜெய்ப்பூர், நாகவுர் மற்றும் சிகார் மாவட்டங்களில் அரிய பூமி கூறுகள், அரிய உலோகம் மற்றும் பொட்டாஷ் கனிமங்களின் மூன்று தொகுதிகளை ஏலம் விட்டது.

 

2024, மார்ச் 7 அன்று மகாராஷ்டிரா இரண்டு தொகுதிகளுக்கான ஏலத்தை அறிவித்தது, அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் 2024, மார்ச் 11 அன்று முறையே இரண்டு மற்றும் ஒரு தொகுதிக்கான ஏலத்தையும்,2024,  மார்ச் 13-ம் தேதி சத்தீஸ்கர் மூன்று தொகுதிக்கான ஏலத்தையும் விட்டன. இது நாடு முழுவதும் ஆய்வு உரிம ஆட்சியின் வரம்பை விரிவுபடுத்தியது.

கட்சிரோலி மாவட்டத்தில் ஈயம், துத்தநாகம் மற்றும் தாமிரம் (அடிப்படை உலோகம்) மற்றும் வைரம் ஆகியவற்றின் இரண்டு தொகுதிகளுக்கு மகாராஷ்டிரா என்ஐடியை வெளியிட்டது, மத்தியப்பிரதேசம் சிவபுரி, குவாலியர் மற்றும் பெதுல் மாவட்டங்களில் தாமிரம், ஈயம், துத்தநாகம் மற்றும் தொடர்புடைய தாதுக்கள் (அடிப்படை உலோகம்), பிஜிஇ மற்றும் தொடர்புடைய கனிமங்களுடன் கூடிய வைரத்தின் இரண்டு தொகுதிகளுக்கு என்ஐடியை வெளியிட்டது, அதே நேரத்தில் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் உள்ள அரிய பூமி தனிமத்தின் ஒரு தொகுதிக்கு ஆந்திரா என்ஐடியை வெளியிட்டுள்ளது. மேலும், சத்தீஸ்கர் அரசு கொண்டகோன், நாராயண்பூர் மற்றும் பஸ்தார் மாவட்டங்களில் வைரம் மற்றும் அரிய பூமி குழு கனிமங்களுக்காக மூன்று தொகுதிகளுக்கு என்..டி. வெளியிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2014807

-----

PKV/KPG/KV

 


(Release ID: 2014906) Visitor Counter : 92