சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் சி.ஆர்.ஐ.எஃப் திட்டத்தின் கீழ் 295 சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.1385.60 கோடிக்கு திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்
Posted On:
14 MAR 2024 1:29PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில், பல்வேறு மாவட்டங்களில் சி.ஆர்.ஐ.எஃப் திட்டத்தின் கீழ் மொத்தம் 2055.62 கி.மீ நீளமுள்ள 295 சாலை மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் ரூ.1385.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் மட்டுமின்றி, இணைப்பை மேம்படுத்தி, அதன் மூலம் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் உறுதியளிக்கிறது என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2014516)
PKV/AG/KRS
(Release ID: 2014761)
Visitor Counter : 85