எரிசக்தி அமைச்சகம்
தேசிய அனல்மின் கழக குழுமம் 2023-24 -ம் ஆண்டில் 400 பில்லியன் யூனிட் மின் உற்பத்தியைக் கடந்தது. இது முந்தைய ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைவிட அதிகமாகும்.
Posted On:
14 MAR 2024 12:11PM by PIB Chennai
தேசிய அனல்மின் கழக குழுமம் நடப்பு நிதியாண்டில் மொத்த மின்சார உற்பத்தியில் 400 பில்லியன் யூனிட்களை 2024 மார்ச் 13 அன்று கடந்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில், இந்நிறுவனம் 399.3 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருந்தது.
முன்னதாக இந்த ஆண்டில் இந்நிறுவனம் 2023, செப்டம்பர் 1 அன்று ஒரே நாளில் 1,428 மில்லியன் யூனிட் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்துள்ளது. தேசிய அனல் மின் கழக அலகுகளின் சிறப்பான செயல்திறன் தேசிய அனல் மின் கழக பொறியாளர்களின் நிபுணத்துவம் மற்றும் அதன் செயல்பாடு, பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு ஒரு சான்றாகும்.
மேலும், இந்தச் சாதனை நாட்டிற்கு நம்பகமான, குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கான தேசிய அனல் மின் கழகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2014485
***
PKV/IR/RS/KV
(Release ID: 2014587)
Visitor Counter : 81