பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்னிவீரர்களின் மூன்றாவது பிரிவின் அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சி ஐஎன்எஸ் சில்காவில் நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2024 11:44AM by PIB Chennai

அக்னிவீரர்களின் மூன்றாவது பிரிவின் அணிவகுப்பு  நிறைவு நிகழ்ச்சி 2024, மார்ச் 15 அன்று ஐஎன்எஸ் சில்காவில் நடைபெற உள்ளது. சில்காவில் கடுமையான பயிற்சி பெற்ற பெண் அக்னிவீரர்கள் உட்பட சுமார் 2600 அக்னிவீரர்களின் வெற்றிகரமான பயிற்சி நிறைவை  இந்த அணிவகுப்பு குறிக்கிறது. கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சியை ஆய்வு செய்யவுள்ளார். இந்நிகழ்ச்சியில் தென் மண்டல கடற்படைத் துணை அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை அக்னிவீரர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வீரர்களின் பெருமைமிக்க குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட உள்ளனர். அத்துடன் பல்வேறு உயர் சாதனை படைத்த  முன்னாள் வீரர்கள், விளையாட்டு பிரபலங்கள்  இவ்விழாவில் பங்கேற்றுத் தங்களுடைய மகத்துவமிக்க சாதனைகள் மூலம் அக்னிவீரர்களை ஊக்குவிக்க உள்ளனர்.

இதன் நிறைவு விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளையும், கோப்பைகளையும் வழங்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2014478

***

PKV/IR/RS/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2014578) வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Odia , Telugu