பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தில் கண்காணிப்பு ஆணையராக திரு ஏ.எஸ்.ராஜீவ் நியமிக்கப்பட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
11 MAR 2024 5:29PM by PIB Chennai
குடியரசுத் தலைவர், 2024 பிப்ரவரி 9 தேதியிட்ட அறிவிக்கை மூலம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு சட்டம், 2003-ன் பிரிவு 4(1)-ன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு ஆணையராக திரு ஏ.எஸ்.ராஜீவை நியமித்துள்ளார்.
மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழு சட்டம் 2003-ன் பிரிவு 5(3)-ல் உள்ள விதிமுறைக்கு இணங்க, குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் முன்பாக திரு ஏ.எஸ்.ராஜீவ் (2024, மார்ச் 11) இன்று ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது மற்றொரு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் திரு அரவிந்த குமார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திரு ஏ எஸ் ராஜீவ் சிண்டிகேட் வங்கி, இந்தியன் வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய நான்கு வங்கிகளில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து அனுபவம் கொண்ட ஒரு வங்கியாளர் ஆவார். இந்தியன் வங்கியில் நிர்வாக இயக்குநராக இருந்த காலத்தில், இந்தியன் வங்கி இந்தியாவின் வலுவான மற்றும் மிகவும் லாபகரமான வங்கிகளில் ஒன்றாக உருவெடுத்தது.
***
AD/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2013493)
आगंतुक पटल : 1406