குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

டிடி நியூஸ் / டிடி இந்தியா தொகுப்பாளர்களின் ஸ்டைலிங் ஒத்துழைப்பை காதி மற்றும் கிராமத் தொழில்கள் அமைப்பின் (கேவிஐசி) தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 10 MAR 2024 4:53PM by PIB Chennai

புது தில்லியில் தூர்தர்ஷன் பவன், மண்டிஹவுசில் நடந்த நிகழ்வில்கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் ,பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி  திரு  கௌரவ் திவேதி மற்றும் தூர்தர்ஷன் குழு முன்னிலையில் டிடி செய்திகள் / டிடி இந்தியா தொலைக்காட்சியின் தொகுப்பாளர்களின்  ஸ்டைலிங் குறித்த ஒத்துழைப்பைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் கூறுகையில் , தூர்தர்ஷன் நிகழ்ச்சிதகளின்  அனைத்து தொகுப்பாளர்களுக்கும் உடையாக இருக்க புதிய பாரதத்தின் புதிய காதி  தயாராக உள்ளது என்றார்.

தேசிய அளவில் ஒவ்வொரு வீட்டிலும் கதர் ஆடையை பிரபலப்படுத்தியதில் பாரதப் பிரதமர் மோடியின் உத்தரவாதம் செய்த சாதனை இது. "தேசத்திற்காக காதி, ஃபேஷனுக்கு கதர், மாற்றத்திற்கு கதர்" என்பதே பிரதமரின் தாரக மந்திரம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், காதி மற்றும் கிராமத் தொழில் துறை ரூ .1.34 லட்சம் கோடியைத் தாண்டி 9.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைகளை உருவாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது காதி கைவினைஞர்களின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்று திரு குமார் எடுத்துரைத்தார்.

பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கௌரவ் திவேதி கருத்து தெரிவிக்கையில், இது தூர்தர்ஷனுக்கு பெருமைக்குரிய தருணம். கேவிஐசி உடனான ஒத்துழைப்பு தூர்தர்ஷனுக்கு பெருமை சேர்க்கும் தருணம், தூர்தர்ஷன் இந்தியா தொகுப்பாளர்களின் ஸ்டைலிங் வடிவம் உலகிற்கு தெரிய வரும் என்றார்.

***

ANU/AD/BS/DL



(Release ID: 2013293) Visitor Counter : 52