உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய உலக அமைப்பின் ஆண்டு முதலீட்டு உச்சி மாநாடு- என்எக்ஸ்டி10-ல் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 06 MAR 2024 6:07PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற  இந்திய உலக அமைப்பின் ஆண்டு முதலீட்டு உச்சி மாநாடு- என்எக்ஸ்டி10-ல் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திரு அமித் ஷா, ஜனநாயகம் தோன்றிய இந்தியாவில் வரும் மாதங்களில் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறினார். இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துத் துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்  முடிவுகள் 2047-ம் ஆண்டில் அதாவது சுதந்திரத்தின் நூற்றாண்டில் இந்தியா எந்த இடத்தில் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் என்று திரு ஷா சுட்டிக்காட்டினார். இந்தத் தேர்தல்கள் ஜனநாயகம் பற்றியது மட்டுமல்ல, ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் கொண்டாட்டம், ஏழைகளின் நல்வாழ்வு, பொது நலன், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உறுதி செய்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை நோக்கி முன்னேறி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். உறங்கிக் கிடந்த நிலையில் இருந்து தற்போது துடிப்பான அரசை இந்தியா பெற்றுள்ளது என்றும், முற்போக்கான வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்றும், முந்தைய பலவீனமான நிலையிலிருந்து சிறந்த பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்கிறது என்றும் அவர் கூறினார்.

***

AD/IR/RS/KRS


(Release ID: 2012029) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Marathi , Hindi