பாதுகாப்பு அமைச்சகம்
வெடிமருந்துகள், டார்பிடோ குண்டு, ஏவுகணை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்எஸ்ஏஎம் 19 படகை, மார்ச் 4, 24 அன்று மும்பை கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் கரஞ்சா என்ஏடி-க்கு வழங்கப்பட்டது
Posted On:
05 MAR 2024 8:32AM by PIB Chennai
இந்திய கடற்படைக்காக தானேயில் உள்ள எம்.எஸ்.எம்.இ கப்பல் கட்டும் தளத்தில், தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட 11 x ஏசிடிசிஎம் படகுத் திட்டத்தின் 5-வது படகான 'வெடிமருந்து, டார்பிடோ குண்டு, ஏவுகணையை உள்ளடக்கிய, எல்எஸ்ஏஎம் 19' படகை மார்ச் 4, 24 அன்று மும்பை கடற்படை கப்பல்கட்டும் தளத்தில், என்ஏடி கரஞ்சாவில் உள்ள தேசிய ஆயுத டிப்போவுக்கு (என்ஏடி) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கேப்டன் அசுதோஷ் தலைமை ஏற்றார்.
ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு இடையே 2021 –ம் ஆண்டு மார்ச் 05-ம் தேதி கையெழுத்தானது. இந்தப் படகுகளை சேர்ப்பதன் மூலம், இந்திய கப்பல்களுக்கு பொருட்கள் மற்றும் தளவாடங்களை கொண்டு செல்வது மற்றும் இறக்குவது எளிதாகும். இந்திய விமானப்படகுகளின் செயல்பாட்டு கடமைகளுக்கு இந்தப் படகுகள் உத்வேகம் அளிக்கும்.
இந்தப் படகுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தொடர்புடைய கடற்படை விதிகள் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் ஒழுங்குமுறைகளின் கீழ் கட்டப்பட்டவையாகும். வடிவமைப்பு கட்டத்தில் படகின் மாதிரி சோதனை விசாகப்பட்டினத்தின் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் படகுகள் மத்திய அரசின் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் பெருமைக்குரியவையாகத் திகழ்கின்றன.
***
PKV/AG/KV
(Release ID: 2011514)
Visitor Counter : 107