சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சுகாதார ஆராய்ச்சிக்கான ஆயுஷ்-இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் மேம்படுத்தப்பட்ட மையத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
04 MAR 2024 12:14PM by PIB Chennai
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சுகாதார ஆராய்ச்சிக்கான ஆயுஷ்-இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் மேம்படுத்தப்பட்ட மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார்.
ஆயுஷ் சுகாதார வசதிக்கான இந்திய பொது சுகாதார தரநிலைகள் தொடக்கம் மற்றும் ரத்தசோகை சிகிச்சைக்கான பன்னோக்கு மருத்துவச் சோதனை மையம் உள்ளிட்டவற்றில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையேயான மிகப்பெரிய கூட்டு நடவடிக்கையையும் அப்போது அவர் அறிவித்தார். ‘ஆயுர்வேதமே அமிர்தம்’ என்ற நிகழ்ச்சி குறித்த 29-வது தேசிய கருத்தரங்கு, தேசிய ஆயுர்வேத வித்யா பீடத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறையில் பல்வேறு அணுகுமுறைகளை ஊக்குவிக்க பாரம்பரிய அறிவுசார், நவீன அறிவியல் ஆராய்ச்சி இடையேயான இடைவெளியை ஒருங்கிணைக்க ஆயுஷ் துறையில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மிக முக்கியம் என்று அவர் கூறினார். ஆயுர்வேதம் நமது கலாச்சாரம், பழங்கால மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று அவர் கூறினார். இது நமது அன்றாட நடவடிக்கைகளில் தற்போதும் பின்பற்றப்படுவதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
*******
AD/IR/RS/KV
(Release ID: 2011189)