நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவைவரி வருவாய் ரூ.1,68,337 கோடியாக அதிகரித்தது; 12.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2024 4:26PM by PIB Chennai

பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டிவருவாய்
ரூ.1,68,337 கோடியாக இருந்தது. இது 2023-ல் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகமாகும்.

பிப்ரவரி 2024 சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம்:

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.31,785 கோடி

மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.39,615 கோடி

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 38,593 கோடி உட்பட ரூ .84,098 கோடி

செஸ்இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 984 கோடி உட்பட ரூ. 12,839 கோடி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 9,713 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 8,774 கோடி வருவாய் கிடைத்தது.

***

(Release ID: 2010615)

PLM/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2010658) வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க: English , Manipuri , Urdu , Marathi , हिन्दी , Gujarati