சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கம் மற்றும் கனிமத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி மானியக் கடிதங்களை சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வழங்கினார்
प्रविष्टि तिथि:
01 MAR 2024 12:52PM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நிதியுதவி அளித்து வருகிறது. சுரங்கத்துறையில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் 1978-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு, செயல்திறன், குறைவான செலவில் விரைவான செயல்முறை ஆகியவற்றுக்காக இந்த நிதியுதவி பெற்று வருகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், இது வழங்கப்படுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக சுரங்க அமைச்சகம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவியை அளித்து வருகிறது. நிதியுதவி பெறுவதற்காக, எம்எஸ்எம்இ பிரிவில் 56 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்ததில், 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 6 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதி வழங்கல் நடைமுறைகளை நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம் என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான நிதி வழங்கல் கடிதங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2010517
***
PKV/RS/KV
(रिलीज़ आईडी: 2010583)
आगंतुक पटल : 120