ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி நிகழ்வான பாரத் டெக்ஸ் 2024 நிறைவடைந்தது

Posted On: 01 MAR 2024 12:17PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வான பாரத் டெக்ஸ் 2024, நேற்று (பிப்ரவரி29, 2024) புதுதில்லியில் நிறைவடைந்தது. பிப்ரவரி 26 அன்று பாரத்மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த 4 நாள் நிகழ்வு இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைக் கண்டது.

ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பு இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீடு என்ற இரட்டைத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த 4 நாள் நிகழ்வில், கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரிகள், 3,500 கண்காட்சியாளர்கள், 111 நாடுகளைச் சேர்ந்த 3,000 வாங்குபவர்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

ஏறக்குறைய 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட கண்காட்சி இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாக இருந்தது.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட முன்னணி ஜவுளி மாநிலங்களின் அரங்குகளும் இதில் இடம்பெற்றன.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஜவுளி  நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் வட்டமேஜை கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் ஜவுளித் துறையின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இந்த நான்கு நாள் நிகழ்வில் பல்வேறு அமர்வுகளில் ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா வி ஜர்தோஷும் பங்கேற்றார்.

***

PLM/AG/KV


(Release ID: 2010580) Visitor Counter : 110