பிரதமர் அலுவலகம்

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசம்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை

நீர்ப்பாசனம், மின்சாரம், சாலை, ரயில், குடிநீர் விநியோகம், நிலக்கரி மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் மத்தியப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.17,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
மத்தியப் பிரதேசத்தில் சைபர் தாலுகா திட்டம் தொடங்கப்பட்டது

"மத்தியப் பிரதேசத்தின் இரட்டை என்ஜின் அரசு மக்களின் நலனுக்காக உறுதிபூண்டுள்ளது"

"மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால்தான் இந்தியா வளர்ச்சியடையும்"

"இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கும்போது உஜ்ஜைனில் உள்ள விக்ரமாதித்யா வேத கடிகாரம் 'கால சக்கரத்துக்கு சாட்சியாக மாறும்"

"இரட்டை என்ஜின் அரசு வளர்ச்சிப் பணிகளை இரட்டிப்பு வேகத்தில் மேற்கொண்டு வருகிறது"

"கிராமங்களை தற்சார்பு ஆக்குவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது"

"மத்திய பிரதேசத்தின் நீர்ப்பாசனத் துறையில் ஒரு புரட்சியை நாங்கள் காண்கிறோம்"

"கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் நற்பெயர் உலகம் முழுவதும் நிறைய அதிகரித்துள்ளது"

"இளைஞர்களின்

Posted On: 29 FEB 2024 5:58PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த 'மத்தியப் பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியின் போது, மத்தியப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.17,000 கோடி மதிப்பிலான நீர்ப்பாசனம், மின்சாரம், சாலை, ரயில், குடிநீர் வழங்கல், நிலக்கரி மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மத்தியப் பிரதேசத்தில் சைபர் தாலுகா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய பிரதமர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். "இந்த துயரமான நேரத்தில் மத்தியப் பிரதேச மக்களுடன் நான் துணை நிற்கிறேன்" என்று பிரதமர் கூறியுள்ளார்.

 வளர்ச்சியடைந்த பாரதம் தீர்மானத்தின் மூலம் மாநிலத்தின் அனைத்து மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீப காலங்களில் மற்ற மாநிலங்களின் இதேபோன்ற தீர்மானங்களை ஒப்புக் கொண்ட அவர், மாநிலங்கள் வளர்ச்சியடையும் போது தான் இந்தியா வளர்ச்சியடையும் என்று கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் 9 நாள் விக்ரமோத்சவ் நாளை தொடங்கப்படுவதைக் குறிப்பிட்டப் பிரதமர், தற்போதைய வளர்ச்சிகளுடன் சேர்த்து இம்மாநிலத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தையும் இது கொண்டாடுகிறது என்றார். உஜ்ஜைனில் அமைக்கப்பட்டுள்ள வேத கடிகாரம், அரசு பாரம்பரியத்தையும், வளர்ச்சியையும் உடன் எடுத்துச் செல்கிறது என்பதற்கு சான்று என்று அவர் சுட்டிக் காட்டினார். "பாபா மஹாகால் நகரம் ஒரு காலத்தில் உலகின் நேரக் கணக்கீட்டின் மையமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அதன் முக்கியத்துவம் மறக்கப்பட்டது" என்று பிரதமர் தெரிவித்தார். இந்த புறக்கணிப்பை சமாளிக்க, உஜ்ஜைனில் உலகின் முதல் விக்ரமாதித்யா வேத கடிகாரத்தை அரசு மீண்டும் நிறுவியுள்ளது என்றும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பாதையில் செல்லும்போது இது காலச்சக்கரத்தின் சாட்சியாக மாறும் என்றும் பிரதமர் கூறினார்.

குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், சாலைகள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.17,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் 30 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். "இரட்டை என்ஜின் அரசு வளர்ச்சிப் பணிகளை இரட்டிப்பு வேகத்துடன் மேற்கொண்டு வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

மோடியின் உத்தரவாதத்தின் மீது தேசம் வைத்துள்ள நம்பிக்கைக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தமது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கான தனது தீர்மானத்தை முன்வைத்தார்.

விவசாயம், தொழில் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கு இரட்டை என்ஜின் அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், மா நர்மதா ஆற்றின் குறுக்கே மூன்று பெரிய நீர்த் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் குறிப்பிட்டார். இது பழங்குடியினர் பகுதிகளில் உள்ள நீர்ப்பாசன பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், குடிநீர் விநியோக பிரச்சனையையும் தீர்க்கும் என்று அவர் கூறினார். "மத்தியப் பிரதேசத்தின் நீர்ப்பாசனத் துறையில் புதிய புரட்சியை நாம் காண்கிறோம்" என்று கூறிய பிரதமர், கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் பந்தல்காட் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதே மிகப்பெரிய சேவை என்று அவர் வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் இன்று நீர்ப்பாசனத் துறையை ஒப்பிட்டுப் பார்த்த பிரதமர், நாட்டில் தற்போது 90 லட்சம் ஹெக்டேராக உள்ள நுண்ணீர் பாசனம் தற்போது 40 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்றார். "இது தற்போதைய அரசின் முன்னுரிமைகள் மற்றும் அதன் முன்னேற்றத்தின் அளவைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

சிறு விவசாயிகளின் மற்றொரு தீவிரமான பிரச்சனையான சேமிப்புக் கிடங்குகள் பற்றாக்குறை பற்றி குறிப்பிட்டப் பிரதமர், சமீபத்தில் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சேமிப்புத் திட்டம் பற்றி பேசினார். வரும் நாட்களில், ஆயிரக்கணக்கான பெரிய கிடங்குகள் கட்டப்படும். நாட்டில் 700 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கின் சேமிப்புத் திறன் இருக்கும். இதற்காக அரசு ரூ.1.25 கோடி முதலீடு செய்யும்.

கூட்டுறவு அமைப்புகள் மூலம் கிராமங்களை தற்சார்பு நாடுகளாக மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். பால் மற்றும் கரும்பு போன்ற நிரூபிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் மீன்வளம் போன்ற பகுதிகளுக்கு கூட்டுறவு நன்மைகள் எவ்வாறு விரிவடைகின்றன என்பதை அவர் விளக்கினார். கிராமப்புற வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் லட்சக்கணக்கான கிராமங்களில் கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் சொத்து அட்டைகள் திட்டத்தின் மூலம் ஊரக சொத்து தகராறுகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். 100 சதவீத கிராமங்கள் ட்ரோன் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய பிரதேசத்தை அவர் பாராட்டினார்.

மத்தியப் பிரதேசத்தின் 55 மாவட்டங்களில் சைபர் தாலுகா திட்டம் தொடங்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், பெயர் பரிமாற்றம் மற்றும் பதிவேடு தொடர்பான பிரச்சனைகளுக்கு டிஜிட்டல் தீர்வுகளை இது வழங்கும் என்றும் இதன் மூலம் மக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தை தொழில்துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், மாநிலத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடம், தற்போதைய அரசு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். "இளைஞர்களின் கனவுகள் மோடியின் தீர்மானம்" என்று பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவற்றில் மத்தியப் பிரதேசம் ஒரு முக்கியமான தூணாக மாறும் என்று குறிப்பிட்ட அவர், மொரேனாவின் சீதாப்பூரில் மெகா தோல் மற்றும் காலணி தொகுப்பு, இந்தூரின் ஆயத்த ஆடைத் தொழிலுக்கான ஜவுளிப் பூங்கா, மண்ட்சவுரில் தொழில்துறை பூங்கா விரிவாக்கம் மற்றும் தார் தொழில்துறை பூங்கா மேம்பாடு ஆகியவை இந்த தொலைநோக்கை நனவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சியை எடுத்துரைத்த பிரதமர், இது பொம்மை ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுத்தது. பிராந்தியத்தில் இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக புத்னியில் பொம்மை தயாரிக்கும் சமூகத்திற்கு பல வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரை கவனித்துக்கொள்வதில் தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பாரம்பரிய கைவினைஞர்களுக்கு விளம்பரம் செய்வது குறித்து பிரதமர் தெரிவித்தார். கிடைக்கக்கூடிய ஒவ்வொரு மேடையிலிருந்தும் இந்த கலைஞர்களை அவர் தொடர்ந்து ஊக்குவித்ததையும், வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அவர் வழங்கிய பரிசுகள் எப்போதும் குடிசைத் தொழில்களின் தயாரிப்புகளாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் தயாரிப்புகளுக்கானக் குரல்' என்ற தனது விளம்பரமும் உள்ளூர் கைவினைஞர்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், முதலீடு மற்றும் சுற்றுலாவின் நேரடி பயன்களை சுட்டிக் காட்டினார். மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குறிப்பிட்ட பிரதமர், ஓம்காரேஷ்வர் மற்றும் மாமலேஷ்வருக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டார். 2028 ஆம் ஆண்டில் ஆதி குரு சங்கராச்சார்யா மற்றும் உஜ்ஜைன் சிம்ஹஸ்தாவின் நினைவாக ஓம்காரேஷ்வரில் வரவிருக்கும் ஏகாதம் தாம், சுற்றுலா வளர்ச்சிக்கு ஊக்கியாக இருக்கும் என்று அவர் கூறினார். "இச்சாப்பூரில் இருந்து இந்தூரில் உள்ள ஓம்கரேஷ்வர் வரை 4 வழி சாலை அமைப்பது பக்தர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும். இன்று தொடங்கி வைக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மத்தியப் பிரதேசத்தின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும். விவசாயம், சுற்றுலா அல்லது தொழில்துறை என இணைப்பு மேம்படும்போது, இவை மூன்றும் பயனடைகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர், அடுத்த 5 ஆண்டுகளில் நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரம் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு கிராமத்திலும் லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது, புதிய வேளாண் புரட்சியை ஏற்படுத்த ட்ரோன் சகோதரிகளை உருவாக்குவது பற்றி அவர் பேசினார். அடுத்த 5 ஆண்டுகளில் மகளிரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறித்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டினார். "அறிக்கையின்படி, நகரங்களை விட கிராமங்களில் வருமானம் வேகமாக அதிகரித்து வருகிறது" என்று அவர் கூறினார். தனது உரையை நிறைவு செய்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதேபோன்று மத்தியப் பிரதேசம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னணி

மத்தியப் பிரதேசத்தில் ரூ.5,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களில் மேல் நர்மதா திட்டம், ராகவ்பூர் பல்நோக்கு திட்டம் மற்றும் பாசானியா பல்நோக்கு திட்டம் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் திண்டோரி, அனுப்பூர் மற்றும் மாண்ட்லா மாவட்டங்களில் 75,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதுடன், இப்பகுதியில் மின்சார விநியோகம் மற்றும் குடிநீரையும் மேம்படுத்தும். மாநிலத்தில் ரூ.800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான இரண்டு நுண்ணீர் பாசனத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பரஸ்தோ நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் ஆலியா நுண்ணீர் நீர்ப்பாசன திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இந்த நுண்ணீர் பாசனத் திட்டங்கள் பெதுல் மற்றும் கந்த்வா மாவட்டங்களில் உள்ள 26,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

ரூ. 2200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட மூன்று ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விரங்கணா, லட்சுமிபாய், ஜான்சி - ஜக்லான் & தௌரா - அகசோட் வழித்தடத்தில் மூன்றாவது வழித்தடத்திற்கான திட்டங்கள் இதில் அடங்கும்; புதிய சுமலி-ஜோரா ஆலாப்பூர் ரயில் பாதையில் பாதை மாற்றும் திட்டம்; மற்றும் பவார்கேடா-ஜுஜார்பூர் ரயில் பாதை மேம்பாலத்திற்கான திட்டங்கள் ரயில் இணைப்பை மேம்படுத்தி, இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்காக, மத்தியப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ .1000 கோடி மதிப்பிலான பல தொழில்துறை திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களில் மொரேனா மாவட்டம் சீதாபூரில் மெகா தோல், காலணி மற்றும் துணைக்கருவிகள் தொகுப்பு; இந்தூரில் ஆடைத் தொழிலுக்கான பிளக் அண்ட் ப்ளே பார்க்; தொழில்துறை பூங்கா மண்ட்சவுர் (ஜக்ககேடி கட்டம் -2); மற்றும் தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் தொழில் பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அடங்கும்.

ஜெயந்த் ஓசிபி சிஎச்பி சைலோ, என்சிஎல் சிங்க்ரௌலி உள்ளிட்ட 1000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிலக்கரித் துறை திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மின்சாரத் துறையை வலுப்படுத்தும் வகையில், பன்னா, ரைசன், சிந்த்வாரா மற்றும் நர்மதாபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஆறு துணை மின் நிலையங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த துணை மின் நிலையங்கள் போபால், பன்னா, ரைசன், சிந்த்வாரா, நர்மதாபுரம், விதிஷா, சாகர், தாமோ, சத்தர்பூர், ஹர்தா மற்றும் செகூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும். இந்த துணை மின் நிலையங்கள் மண்டிதீப் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் பயனளிக்கும்.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.880 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும், மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். கார்கோனில் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கும் தேசத் திட்டத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, மத்தியப் பிரதேசத்தில் சைபர் தெஹ்ஸில் திட்டம், காகிதமற்ற, முகமற்ற, முழுமையான காஸ்ராவின் விற்பனை-கொள்முதல் மற்றும் வருவாய் பதிவுகளில் பதிவு திருத்தம் ஆகியவற்றை ஆன்லைனில் அகற்றுவதை உறுதி செய்யும். மாநிலத்தின் அனைத்து 55 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், முழு மத்தியப் பிரதேசத்திற்கும் ஒரே வருவாய் நீதிமன்றத்தையும் வழங்கும். இறுதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலை விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க மின்னஞ்சல் / வாட்ஸ்அப்பையும் இது பயன்படுத்துகிறது.

மத்தியப் பிரதேசத்தில் இதர திட்டங்களுடன் பல்வேறு முக்கிய சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மத்தியப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு, சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு பெரும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இந்தத் திட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

***

ANU/AD/BS/RS/DL



(Release ID: 2010373) Visitor Counter : 61