நிதி அமைச்சகம்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வடகிழக்குப் பகுதியில் உள்ள நில சுங்க நிலையங்களில் மின்னணு தரவு பரிமாற்ற வசதியைத் தொடங்கி வைக்கிறார்- சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொல்பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும் நாளை பங்கேற்கிறார்
प्रविष्टि तिथि:
28 FEB 2024 5:33PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள நில சுங்க நிலையங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற வசதியை (இடிஐ) காணொலி முறையில் புதுதில்லியிலிருந்து நாளை (29.02.2024) தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் (சிபிஐசி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட தொல்பொருட்களை மத்திய நிதியமைச்சர் முன்னிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்கும் விழாவாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 இடங்களில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் பல்வேறு மண்டல பிரிவுகளிடம் மொத்தம் 101 பழங்காலப் பொருட்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.
***
ANU/PKV/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2009897)
आगंतुक पटल : 107