கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலைத்துறையில் புகழ்பெற்ற ஆறு ஆளுமைகள் அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Posted On: 28 FEB 2024 2:47PM by PIB Chennai

புதுதில்லியின் இசை, நடனம், நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு 2024 பிப்ரவரி 21,22  ஆகிய நாட்களில் புதுதில்லியில் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கலைத்துறையில் ஆறு (6) புகழ்பெற்ற நபர்களை அகாடமி விருதுக்கு (அகாடமி ரத்னா) ஒருமனதாக தேர்ந்தெடுத்தது. 

2022 & 2023-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாமி விருதுகளுக்கு (அகாடமி புரஸ்கார்) இசை, நடனம், நாடகம், பாரம்பரிய / நாட்டுப்புற / பழங்குடி இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொண்ணூற்றிரண்டு (92) கலைஞர்களை பொதுக்குழு தேர்வு செய்தது.

2022, 2023-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி உஸ்தாத் பிஸ்மில்லா கான் இளையோர் விருதுக்கு 80 இளம் கலைஞர்களை அகாடமியின் பொதுக்குழு தேர்வு செய்துள்ளது. உஸ்தாத் பிஸ்மில்லா கான் இளையோர் விருதுடன் ரூ.25,000-ரொக்கத்   தொகை, தாமிரப் பத்திரம், அங்கவஸ்திரம் ஆகியவையும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை சங்கீத நாடக அகாடமியின் தலைவர் சிறப்பு விழாவில் வழங்குவார். அகாடமி ரத்னா விருது பெறுவோருக்கு  3 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும், அகாடமி விருது பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்படும். அத்துடன் தாமிரப் பத்திரம், அங்கவஸ்திரம் ஆகியவையும் வழங்கப்படவுள்ளது.

 

***

ANU/PKV/IR/AG /KRS


(Release ID: 2009781) Visitor Counter : 130