சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், பஞ்சாப் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2024 12:15PM by PIB Chennai
பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், பஞ்சாப் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகள், வாரியங்கள், கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு மற்றும் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
முந்தைய கூட்டங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், பொது வேலைவாய்ப்பில் பஞ்சாப் அரசு நிர்ணயித்த இடஒதுக்கீடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதித்தது. உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினருக்கு உரிய அளவு இடஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தது.
***
(Release ID: 2009690)
ANU/PKV/PLM/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2009729)
வருகையாளர் எண்ணிக்கை : 167