சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
'ஊதா திருவிழாவை' குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
25 FEB 2024 10:22AM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சார்பில் 2024 பிப்ரவரி 26 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அமிர்த உத்யானில் நடத்தப்பட உள்ள 'ஊதா விழாவை' குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு தொடங்கி வைக்கிறார். .
2024 ஜனவரி 8 முதல் 13 வரை கோவாவில் நடைபெற்ற 'சர்வதேச ஊதா நிற விழா, 2024' வெற்றியைத் தொடர்ந்து, இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர், இணையமைச்சர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், தங்கள் பாதுகாவலர்களுடன் இந்தக் கம்பீரமான நிகழ்வில் கூடுவார்கள். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உடல் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம் இந்த விழாவின் ஒருங்கிணைப்பு நிறுவனமாகச் செயல்படுகிறது.
அணுகல், உள்ளடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் துறையில் பணிபுரியும் நிறுவனங்களின் முழுமையான அம்சங்களை உள்ளடக்கியதாக ஊதா திருவிழாவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை அறிந்து கொள்ளுங்கள், ஊதா கஃபே, ஊதா கலைடாஸ்கோப், ஊதா நேரடி அனுபவ மண்டலம், ஊதா விளையாட்டு போன்ற அனுபவங்களைக் கொண்டதாக ஊதா திருவிழா இருக்கும்.
விழாக்களுக்கு அப்பால், பார்வையாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைக்கப்படுகிறார்கள்.
இந்த விழா ஒவ்வொருவரும் தங்கள் யோசனைகளையும் நுண்ணறிவுகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.
இது மிகவும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய சமூகத்தை உருவாக்குகிறது. பல்வேறு குறைபாடுகள் மற்றும் அவை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உடல் குறைபாடுகளைச் சுற்றியுள்ள தவறான கருத்துகள், பாரபட்சங்கள், புறக்கணிப்புகள் ஆகியவற்றிற்கு சவால் விடுவதும், மாற்றுத் திறனாளிகளைப் புரிந்து, ஏற்றுக்கொண்டு, சமுதாயத்தில் சேர்த்துக் கொள்வதும் இவ்விழாவின் நோக்கமாகும்.
*******
ANU/PKV/BS/DL
(Release ID: 2008799)
Visitor Counter : 108