குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சல பிரதேசத்தின் வாழ்க்கை முறை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது; இது அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும், குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

प्रविष्टि तिथि: 20 FEB 2024 5:54PM by PIB Chennai

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அருணாச்சலப் பிரதேச மக்கள் கடைபிடித்து வரும் அணுகுமுறையை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்திற்கு தமது முதல் பயணத்தை மேற்கொண்டு இட்டாநகரில் இன்று (20.02.2024) நடைபெற்ற, 38-வது மாநில நிறுவன தின கொண்டாட்டங்களில் அவர் உரையாற்றினார்.

இந்த மாநில மக்களின் வாழ்க்கை முறை இயற்கையுடன் இணைந்த சகவாழ்வுக்கு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். இந்த மாநிலத்தின் அழகிய நிலப்பரப்பு, பனி மலைகள் மற்றும் பசுமையான காடுகள் அனைவரையும் ஈர்ப்பதாக அவர் கூறினார்.

 இம்மாநிலத்தின் இயற்கை விளைபொருட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிய சந்தைகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். எட்டு வடகிழக்கு மாநிலங்களும், அஷ்ட லட்சுமிகள் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், வடகிழக்குப் பகுதி  இல்லாமல் நாட்டின் கலாச்சார கட்டமைப்பு முழுமையடையாது என்று தெரிவித்தார். இந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு, சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.

அருணாச்சலப் பிரதேச ஆளுநர் திரு கைவால்யா திரிவிக்ரம் பர்நாயக், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

ANU/AD/PLM/RS/DL


(रिलीज़ आईडी: 2007528) आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese