சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் லத்தூரில் விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கட்டப்பட்ட விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்

Posted On: 20 FEB 2024 12:50PM by PIB Chennai

"நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், சமீபத்திய தொற்றுப் பாதிப்பு நெருக்கடியின் போது இது நிரூபிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் லத்தூரில் உள்ள விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் திரு மோகன் மதுகர் ராவ் பகவத் முன்னிலையில் இன்று அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகில் பல சுகாதார நடைமுறைகள் உள்ளன என்று கூறினார். இருப்பினும் இந்திய மரபியலுடன் இணைந்த நமது சொந்த சுகாதார மாதிரியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

புற்றுநோய் மற்றும் மனநல பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் பல மருத்துவ வழிகாட்டுதல்களை நமக்கு வழங்குகின்றன என்றார். இந்தியாவின் பாரம்பரியம் பல்வேறு நோய்களை எதிர்கொள்வதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் அறிவைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுகாதார சேவைகளில் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு பாடுபடுகிறது என்று அவர் கூறினார். மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் இந்திய சுகாதாரத்துறை நிபுணர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அமைச்சர், இந்த பாரம்பரியம் நமது பழமையான கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது என்றார்.

கொவிட் நெருக்கடி மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்ததுடன், 'வசுதைவ குடும்பகம்' என்ற மதிப்புகளையும் உலகிற்கு காட்டியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது என்பதை குறிப்பிட்ட அவர் மக்களுக்கு சேவை செய்வதை நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறினார். மருத்துவம் என்பது ஒரு வணிகம் அல்ல என்றும் நமது கலாச்சாரத்தில் அது உள்ளார்ந்த சேவையாக உள்ளது என்றும் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

***

(Release ID: 2007311)

ANU/SM/PLM/RS/KRS


(Release ID: 2007381) Visitor Counter : 112