அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய தேசிய இளையோர் அறிவியல் கழகம் 9-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது
Posted On:
19 FEB 2024 11:06AM by PIB Chennai
இந்திய தேசிய இளையோர் அறிவியல் கழகம் தனது ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை பிப்ரவரி 17 அன்று நடத்தியது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) -தேசிய அறிவியல் தொடர்பு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) - தேசிய அறிவியல் தொடர்பு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் உரையாற்றினார். சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு அறிவியல் தொடர்பு எவ்வாறு முக்கியமானது என்று அவர் விளக்கினார். இந்திய தேசிய இளையோர் அறிவியல் கழகத்தின் ஆண்டு அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இளம் விஞ்ஞானிகளிடையே அறிவியல் கல்வி, கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2014-ம் ஆண்டில் இந்தியாவில் நிறுவப்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இந்திய தேசிய இளையோர் அறிவியல் கழகம் உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) - தேசிய அறிவியல் தொடர்பு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் என்பது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் உறுப்பு ஆய்வகங்களில் ஒன்றாகும். இது அறிவியல் தகவல் தொடர்பு துறைகளில் நிபுணத்துவம் பெற்றது.
***
(Release ID: 2007009)
Visitor Counter : 94