வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

1987-88 நிதியாண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியில் இருந்து 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு

Posted On: 17 FEB 2024 10:08AM by PIB Chennai

1987-88 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர ஏற்றுமதியுடன் தொடங்கிய, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் செயலூக்கமான தலையீடுகள் காரணமாக 2022-23 நிதியாண்டில் விவசாய ஏற்றுமதி 26.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அதிவேக வளர்ச்சியின் இந்தப் பயணம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. இது 12% என்ற பாராட்டத்தக்க கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக்  காட்டுகிறது.

2022-23 ம் நிதியாண்டில், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 53.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியில் ஆணையம் கணிசமான அளவுக்கு  51% பங்களித்துள்ளது. 2023 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், ஆணையத்தின் ஏற்றுமதி கூடையில் உள்ள 23 முக்கிய பொருட்களில், 18 நேர்மறையான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. புதிய பழங்கள் ஏற்றுமதி  29%  வளர்ச்சியைப் பதிவு செய்து, ஒரு தனித்துவமான செயல்திறனாக வெளிப்பட்டது. மேலும், பதப்படுத்தப்பட்ட காய்கறிகளின் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது, அதைத் தொடர்ந்து இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பாஸ்மதி அரிசி மற்றும் புதிய காய்கறிகள் ஆகியவையும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டன. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா தனது புதிய பழங்கள் ஏற்றுமதி தடத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது, முந்தைய ஆண்டில் 102 இடங்களுடன் ஒப்பிடும்போது இப்போது 111 நாடுகளுக்கு சேவை செய்கிறது.

13.02.2024 அன்று அதன் 38வது நிறுவன தினத்தன்று, விவசாய ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு பயணத்தை ஆணையம்  நினைவுகூர்ந்தது, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1986 இல் நிறுவப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஏப்ரல்-நவம்பர் 2023 இல், பல முக்கிய பொருட்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டன, உதாரணமாக, வாழைப்பழங்கள்: 63%, பயறு (உலர்ந்த மற்றும் ஷெல் செய்யப்பட்டவை): 110%, புதிய முட்டைகள்: 160% ஆகியவை அடங்கும்.

.2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு 19% அதிகரித்து, முந்தைய ஆண்டில் 3.33 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 3.97 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அதே நேரத்தில், ஏற்றுமதியின் அளவு 11% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது, அதே காலத்திற்குள் 31.98 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 35.43 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த ஏற்றுமதிக்கான முதல் ஐந்து இடங்களாக வெளிவருவதால், பாஸ்மதி அரிசி சிறந்த சந்தைகளுக்கு வழிவகுத்தது. இந்த வலுவான செயல்திறன் பாஸ்மதி அரிசிக்கான நீடித்த புகழ் மற்றும் உலகளாவிய தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,

*******

ANU/PKV/DL


(Release ID: 2006751) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Marathi , Hindi