பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
16 FEB 2024 3:32PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ரூ.84,560 கோடி மதிப்பிலான பல்வேறு மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கான அவசியத்தை ஏற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் ஒப்புதலை வழங்கியது. 'தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கு 2024 பிப்ரவரி 16 அன்று வழங்கப்பட்ட ஒப்புதல்கள் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கின்றன.
தொலயுணர்வு கருவி மூலம் செயலிழக்கச் செய்யும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, சுரங்க நில அதிர்வு உணர்வு திறன் கொண்ட, டாங்கி எதிர்ப்புக் கருவிகளை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது, மேம்படுத்தப்பட்டது, தயாரிக்கப்பட்டது என்ற பிரிவின் கீழ், கொள்முதல் செய்வதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
படைகளின் பார்வைக் கோட்டிற்கு அப்பாற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய உத்திபூர்வ போர்ப் பகுதியில் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக, கொள்முதல் பிரிவின் கீழ் தேவையை ஏற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த, குறிப்பாக மெதுவாகப் பறக்கும், சிறிய மற்றும் தாழ்வாகப் பறக்கும் இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட கட்டுப்பாட்டு ரேடார்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடுத்தர தூர கடல்சார் உளவு மற்றும் பல்நோக்குக் கடல்சார் விமானங்களை வாங்குதல் மற்றும் தயாரித்தல் பிரிவு மூலம் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் பாதுகாப்பு கொள்முதல் கௌன்சிலால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2006552
****
ANU/SMB/BS/RS/KV
(Release ID: 2006641)
Visitor Counter : 133