பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அயோத்தியில் சிறப்பு கத்ரா-வைஷ்ணோதேவி ரயிலில் வந்த பக்தர்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனிப்பட்ட முறையில் வரவேற்றார்
Posted On:
14 FEB 2024 5:23PM by PIB Chennai
புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலில் வழிபடுவதற்காக இன்று காலை கத்ரா-வைஷ்ணோதேவி சிறப்பு ரயில் மூலம் அயோத்தி வந்தடைந்த பக்தர்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனிப்பட்ட முறையில் வரவேற்றார்.
கத்ராவில் இருந்து பக்தர்களின் முதல் சிறப்பு ரயில் இன்று காலை அயோத்தியை அடைந்தது. மேலும் ஜம்முவைத் தவிர உதம்பூர் மற்றும் ரியாசியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்றது. இந்த புனிதப் பயணத்தை எளிதாக்குவதற்காக வடக்கு ரயில்வேயால் இயக்கப்படும் கத்ரா நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு 'ஆஸ்தா' ரயில்களில் இது முதலாவதாகும்.
2024, ஜனவரி 22, அன்று நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவைத் தொடர்ந்து, அயோத்திக்கு யாத்திரை செல்வதற்கு வசதியாக, நாடு முழுவதும் 66 இடங்களை இணைக்கும் தலா 22 பெட்டிகளைக் கொண்ட "ஆஸ்தா சிறப்பு" ரயில்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
உதம்பூர், ரியாசி மற்றும் ஜம்மு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலில் பிரார்த்தனை செய்ய பக்தர்களுடன் சென்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2005962
----
(Release ID: 2005962)
ANU/PKV/IR/KPG/KRS
(Release ID: 2006050)