மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், முதலாவது டிஜிட்டல் இந்தியா எதிர்கால திறன் உச்சி மாநாட்டை குவஹாத்தியில் நாளை நடத்துகிறது
Posted On:
14 FEB 2024 3:17PM by PIB Chennai
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் நாளை (பிப்ரவரி 15, 2024) குவஹாத்தியில் முதலாவது டிஜிட்டல் இந்தியா எதிர்கால திறன் உச்சி மாநாட்டை நடத்துகிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இளம் தொழில்நுட்ப நிபுணர்கள், சிந்தனையாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
அடுத்த தலைமுறை அதிநவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், குறைகடத்திகள், ரோபோடிக்ஸ், போன்றவற்றில் இளம் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்த உச்சிமாநாடு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் திறன் மையமாக மாற்றுவது குறித்து விவாதிக்க உள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் 1000-க்கும் மேற்பட்ட முக்கிய பங்கேற்பாளர்களும், பல்வேறு கண்காட்சிகளும் இடம்பெற உள்ளன.
இந்த உச்சிமாநாட்டில் பின்வரும் கருப்பொருள்களில் நான்கு குழு விவாதங்களும் இடம்பெறும்:
1. செமிகான் இந்தியா
2. செயற்கை நுண்ணறிவு இந்தியா
3. இணையதள பாதுகாப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
4. டிஜிட்டல் துறையில் இந்தியாவின் திறமை
***
Release ID: 2005863)
ANU/PKV/PLM/RS/KRS
(Release ID: 2005951)
Visitor Counter : 130