பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியின தொழில் முனைவோருக்கு அதிகாரமளித்தல்: பழங்குடியினர் திருவிழாவின் வர்த்தகர்களுக்கு இடையேயான சந்திப்பு பொருளாதார ஒத்துழைப்பிற்கு வழிவகுத்துள்ளது

Posted On: 14 FEB 2024 11:44AM by PIB Chennai

புதுதில்லியில் பழங்குடியினர் திருவிழாவின் ஒருபகுதியாக பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்த வர்த்தகர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கு பழங்குடியினர் நலத்துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தலைமை வகித்தார்.

இந்த வர்த்தகர்களுக்கு இடையேயான சந்திப்பு தொழில்துறை தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், பழங்குடியின கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இடையே நேரடி உரையாடல் வாய்ப்பை ஏற்படுத்தியது. இது ஏராளமான வணிக வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கும், அதனை முக்கிய அமைப்பில் ஒருங்கிணைப்பதற்கும் வழிவகுத்தது. நிபுணர்கள் தலைமையிலான பயிலரங்குகள், குழு விவாதங்கள், தொழில்முனைவோருக்கான  வெற்றிக்கான வாய்ப்புக் குறித்து விளக்கியது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அர்ஜூன் முண்டா, கீழ்மட்ட அளவில் பழங்குடியினத் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் உள்ள  உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

நான்கு புத்தொழில் நிறுவனங்கள், மூன்று தொழில்துறை  கூட்டமைப்புகள், ஒரு உணவு விநியோக நிறுவனம் உள்ளிட்டோர் இந்த வர்த்தக உரையாடலில் கலந்து கொண்டனர்

சுமார் 250 பழங்குடியின தொழில்முனைவோரின் அரங்குகளில் இடம் பெற்ற கண்காட்சி, பாரம்பரிய கைவினைத்திறனை சமகால கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற பல்வேறு வகையான தயாரிப்புகளுடன் பங்கேற்பாளர்களைக் கவர்ந்தது.

---

ANU/PKV/IR/KPG/KV



(Release ID: 2005856) Visitor Counter : 52


Read this release in: English , Urdu , Marathi , Hindi