பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பிரதமரின் வானி சேவையை விரிவுபடுத்தும் வகையில் 'ஸ்மார்ட் கிராம பஞ்சாயத்து: கிராம பஞ்சாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கிய புரட்சி' என்ற முன்னோடித் திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 13 FEB 2024 4:28PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், பெகுசராய் மாவட்டத்தின் பராவுனி தொகுதிக்குட்பட்ட பாப்ரூர் கிராம பஞ்சாயத்தில் பிரதமரின் வைஃபை அணுகல் கட்டமைப்பு (PM-WANI) சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கூடிய 'ஸ்மார்ட் கிராம பஞ்சாயத்து: கிராம பஞ்சாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கிய புரட்சி' என்ற பரிசோதனை அடிப்படையிலான திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் வைஃபை சேவைகளை வழங்கிய பீகாரின் முதல் மாவட்டம் என்ற பெயரைப் பெகுசராய் மாவட்டம் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தனது உரையில், கிராமப்புற சமூகங்களின் மற்றும் மேம்பாட்டிற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை டிஜிட்டல் முன்முயற்சிகள் மூலம் கிராமப்புறங்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டவை என அவர் எடுத்துரைத்தார்.

கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் முழுமையான வளர்ச்சிக்காக பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் தொழில்நுட்பத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை திரு சிங் வலியுறுத்தினார். வயது அல்லது பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை தங்கள் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அது கொண்டு வரும் மாற்றத்தக்க தாக்கத்தையும் எடுத்துரைத்தார்.

கிராம பஞ்சாயத்துகளில் வைஃபை சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம், அரசு கற்பனை செய்துள்ள நேர்மறையான மாற்றம் கிராமப்புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெளிப்படும். 3 கோடி பெண்களை 'லட்சாதிபதி சகோதரிகள்' ஆக்குவது என்ற லட்சிய இலக்கு உட்பட, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் திரு சிங் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

விழாவில் உள்ளூர்வாசிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பிரதமரின் வைஃபை அணுகல் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மூலம் தடையற்ற மற்றும் நம்பகமான வைஃபை இணைய சேவைகளை அணுகுவதன் மூலம், கிராம பஞ்சாயத்துகள் பல்வேறு வளர்ச்சி முயற்சிகளை எளிதாக்கலாம் மற்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம், மின் ஆளுமை, திறன் மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள் போன்ற பல வழிகளில் தங்கள் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும். டிஜிட்டல் சகாப்தத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை அணுக முடியும்.

***

(Release ID: 2005588)

ANU/SMB/BS/AG/KRS



(Release ID: 2005723) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Telugu