அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புவிசார் தரவு மற்றும் தொடர்புடைய சேவைகளை அணுகுவதன் மூலம் உள்ளடக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை தேசியப் புவியியல் கொள்கை பூர்த்தி செய்கிறது

Posted On: 13 FEB 2024 2:24PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில்அரசு தேசிய புவியியல் கொள்கை 2022  செயல்படுத்துகிறது. புவிசார் தரவுகளின் அணுகல் மற்றும் பயன்பாட்டைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளதுகுடிமக்கள் சேவைகளை விரைவாக மேம்படுத்துகிறது மற்றும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு அதன் அணுகலை அதிகரித்துள்ளது.

 

2022-ல் தொடங்கப்பட்ட தேசிய புவியியல் கொள்கையை செயல்படுத்துவதற்காகஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புவிசார் தரவு அணுகலை தாராளமயமாக்குவதற்கான ஆளுகைக் கட்டமைப்பை ஒருங்கிணைத்தது. புவிசார் தரவு உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன மேம்பாட்டை அறிவியல், தொழில்நுட்பத் துறை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தற்சார்பு இந்தியாவை வலியுறுத்திஉள்ளூர் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த தங்கள் சொந்த புவிசார் தரவை உருவாக்கவும் பயன்படுத்தவும் இது அதிகாரம் அளிக்கிறது . இது திறந்த தரநிலைகள்திறந்த தரவு மற்றும் தளங்களை ஊக்குவிக்கிறது. 

 

"ஐ.நா. உலகப் புவிசார் சர்வதேச காங்கிரஸில் உள்ளடக்கம் மற்றும் முன்னேற்றத்தை இயக்குவதில் புவிசார் தொழில்நுட்பங்களின் பங்கை பிரதமர் எடுத்துரைத்தார். தேசிய புவியியல் கொள்கை மூலம் புவிசார் தரவு அணுகலைத் தாராளமயமாக்குவது இந்த திசையில் ஒரு முக்கியப் படியாகும்" என்று அறிவியல், தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் கூறினார்.

 

தரவு அணுகலை தாராளமயமாக்குவதற்கான கொள்கை அறிவிக்கப்பட்ட பின்திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ்ஆளுமை கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முன் அனுமதிபாதுகாப்பு அனுமதிஉரிமம், நாட்டுக்குள் புவிசார் தரவு மற்றும் வரைபடங்கள் மீதான பிற கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் அனுமதி முறை சுய சான்றிதழால் மாற்றப்பட்டுள்ளதுஇது அணுகலை எளிதாக்குகிறது. 

 

தரவு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும்நிறுவனங்கள் மற்றும் துறைகளில் சிறந்த புவிசார் தரவு கிடைப்பதை மேம்படுத்துவதற்கும்இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக செயல்படும் இந்திய நில அளவியல்துறை, ஒரு கட்டமைப்பைத்  தொடங்கியுள்ளது. இது தவிரஆந்திராஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் 2.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை ஆய்வு செய்து வரைபடமாக்கியுள்ளது.

***

(Release ID: 2005538)

ANU/SMB/BS/AG/KRS


(Release ID: 2005639) Visitor Counter : 145