மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினம் வேலைவாய்ப்பு விழாவில் 225 பணி நியமனக் கடிதங்களை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வழங்கினார்

Posted On: 12 FEB 2024 2:58PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மற்றும் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் விசாகப்பட்டினத்தில் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் 225 இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணி நியமனம் பெற்ற இளைஞர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நகரத்தின் முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி முறையில்  ஒரு லட்சம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். அதன் ஒரு கட்டமாக இந்த நிகழ்வில் அந்தமான் நிக்கோபார் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

மத்தியமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது உரையில், 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆளுகை மற்றும் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தை வலியுறுத்தினார், இது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

"நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கான முடிவை மேற்கொண்ட இளைஞர்களை நான் வாழ்த்துகிறேன். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் உற்சாகமான நேரத்தில் நீங்கள் அரசுப் பணியில் நுழைகிறீர்கள். பல ஆண்டுகளாக, நமது நாடு அதன் சிறந்த கலாச்சாரம் மற்றும் ஆற்றலுக்காக அறியப்பட்டது, கடந்த பத்தாண்டில், அரசு, அரசியல் கலாச்சாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தனியார் துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடைய செயல்திறன் கலாச்சாரம் இப்போது அரசுத் துறையிலும் நுழைந்துள்ளது. கடின உழைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் கலாச்சாரம் தான் இப்போது மத்திய அரசை வரையறுக்கிறது. அரசில் இருப்பது சேவை, நல்லாட்சி மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது பற்றியது, இது அதிகாரம் அல்லது அதிகாரத்தைப் பற்றியது அல்ல"என்று அமைச்சர் கூறினார்.

***

 

(Release ID: 2005241)

ANU/AD/BS/RS/KRS


(Release ID: 2005355) Visitor Counter : 76


Read this release in: Kannada , English , Urdu , Hindi