குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராணுவ பாதுகாப்பு படைப்பிரிவின் சம்பிரதாய படை மாற்ற நிகழ்ச்சியைக் குடியரசுத்தலைவர் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2024 2:16PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 11, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியில் ஈடுபடுத்தப்படிருந்த ராணுவக் காவலர் படைப் பிரிவின் சம்பிரதாய படை மாற்றத்தைப் பார்வையிட்டார், இதில் சீக்கிய ரெஜிமெண்டின் 6-வது பட்டாலியன், சம்பிரதாய ராணுவ காவலர் பட்டாலியனாக அதன் பதவிக்காலம் முடிந்ததும், 5-வது கோர்கா ரைபிள்ஸின் 1 வது   பட்டாலியனிடம் பொறுப்பை ஒப்படைத்தது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், சீக்கிய ரெஜிமெண்டின் 6-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ராணுவ பாரம்பரியத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பின்பற்றி, குடியரசுத் தலைவர் மாளிகையில் முழு அர்ப்பணிப்புடன் தங்கள் கடமையை நிறைவேற்றியதற்காகப் பாராட்டு தெரிவித்தார். 5-வது கோர்கா ரைபிள்ஸின் 1-வது  பட்டாலியனை வரவேற்ற அவர், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் புதிய சாதனை படைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராணுவத்தின் பல்வேறு காலாட்படை பிரிவுகள் சுழற்சி முறையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய ராணுவ காவலராக செயல்படுகின்றன. முக்கிய நிகழ்ச்சிகளான மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துதல், குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ராணுவ காவலர் பட்டாலியன், குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய ரீதியான காவல் பணிகளை ஆற்றி வருகிறது.

----

 

ANU/PKV/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2004973) வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada