சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வயது முதிர்ந்த பெண்களுக்கு அதிகாரமளித்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2024 2:33PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, அடல் வயோ அபியுதய் யோஜனா (AVYAY) திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை (IPSrC) செயல்படுத்தி வருகிறது, இதன் கீழ் மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள் (முதியோர் இல்லங்கள்), தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா  மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

அனைத்து பாலினங்களையும் சேர்ந்த வறிய மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு போன்ற வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், குறிப்பாக முதியோர் இல்லங்களுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. தற்போது மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், மொத்தம் 604 முதியோர் இல்லங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 25 முதியோர் இல்லங்கள் மகளிர் முதியோர் இல்லங்களாகும்.

மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டத்தையும் இத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

(Release ID: 2002986)

ANU/PKV/PLM/RS/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2003082) வருகையாளர் எண்ணிக்கை : 134
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu