உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் கீழ் 519 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன
Posted On:
05 FEB 2024 2:44PM by PIB Chennai
பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 519 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தற்போது உடான் திட்டத்தின் கீழ் 2 நீர் விமானப் போக்குவரத்து நிலையங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர் இயக்கு தளங்கள் உட்பட 76 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. உடான் பிராந்திய இணைப்புத் திட்ட விமானங்களை இயக்க 4 விமான நிலையங்கள் தயாராக உள்ளன. 09 ஹெலிகாப்டர் / விமான நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து, அனுமதி அளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உடான் திட்டத்தின் கீழ் 17 விமான / ஹெலிகாப்டர் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள விமான நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடல் நிலையில் உள்ளன.
ஜெட் ஏர்வேஸ், ஜூம் ஏர், ட்ரூஜெட், டெக்கான் ஏர், ஏர் ஒடிசா போன்ற சில விமான நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், அதிக பராமரிப்பு செலவுகள், பயிற்சி பெற்ற விமானிகள் குறைவு, நாட்டில் பராமரிப்பு, பழுது மற்றும் மறுசீரமைப்பு வசதிகள் இன்மையாலும், தற்போது 2 நீர் விமான நிலையங்கள் உட்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாமல் உள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு வி.கே.சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
********
(Release ID: 2002543)
ANU/SMB/IR/KPG/KRS
(Release ID: 2002641)