உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

2023 ம் ஆண்டில், பெண்களுக்கு 294 வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதம் ஆகும்

Posted On: 05 FEB 2024 2:43PM by PIB Chennai

இந்தியாவில் பெண் விமானிகளின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில், வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களின்  எண்ணிக்கை 1622 ஆகும். இதில் 294 உரிமங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதமாகும்.

2022-ம் ஆண்டுடன் (240 உரிமங்கள்) ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் பெண்களுக்கு வழங்கப்பட்ட வணிக விமான ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை (294 உரிமங்கள்) 22 சதவீதம் அதிகரித்துள்ளது

தற்போது, பல்வேறு இந்திய பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத  விமான நிறுவனங்களில் பணிபுரியும் மொத்த பெண் விமானிகளின் எண்ணிக்கை, மொத்த  விமான ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 14 சதவீதமாக உள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் நாட்டில் ஆண், பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு வி.கே.சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

ANU/SMB/IR/KPG/KV



(Release ID: 2002626) Visitor Counter : 89