ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய காவலர் நினைவிடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில், காவல்துறை தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு மாத கால நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது

Posted On: 04 FEB 2024 2:42PM by PIB Chennai

தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவகம் (NPM) என்பது தேசிய பாதுகாப்பிற்காக கடமையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து மத்திய / மாநில காவல்துறையினரின் காவலர்களை கௌரவிப்பதற்கான முன்முயற்சியாகும். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், தேசிய சொத்துக்களைப் பாதுகாத்தல், பேரழிவுகள் மற்றும் பிற அவசர நிலைகளை எதிர்த்துப் போராடி எல்லையிலும், உள்நாட்டுப்பகுதியிலும் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களுக்கு எதிராக போராடும் நமது காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நினைவகம் கம்பீரமாக நிற்கிறது.

காவல்துறைத் தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவிக்கவும் ஒவ்வொரு வார இறுதியிலும் தேசிய காவலர் நினைவிடத்தில் ஒரு விழாவை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஒரு மாத காலம் நடத்தும் பொறுப்பு சுழற்சி முறையில் ஒரு மத்திய காவல் படையிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு 2024 பிப்ரவரி மாதத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது,

ஒரு மாத கால நிகழ்வின் தொடக்கமாக, ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் (RPF), நேற்று (2024 பிப்ரவரி 3) புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவகத்தில் காவலர் நினைவகத்தில் மலர் வளையம் வைத்தல், இசைக்குழு நிகழ்ச்சி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுடன் கொண்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா 2024 பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேசிய காவலர் நினைவிடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையால் தொடர்ந்து நடத்தப்படும்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுதப் படையான ரயில்வே பாதுகாப்புப் படை ஆர்.பி.எஃப், மக்களைக் காப்பாற்றுவதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், இப்படை 3719 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 11,794 குழந்தைகள் மற்றும் துன்பத்தில் இருந்த 3492 பெரியவர்களை மீட்டுள்ளது. 257 மனித கடத்தல்காரர்களை கைது செய்ததன் மூலம் 1048 பாதிக்கப்பட்டவர்களை மனித கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. 922 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது. மக்கள் சேவை என்ற நோக்கத்துடன் இந்த படை செயல்படுகிறது. இப்படை ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு என்பதைத் தாண்டி ரயில் பயணிகளின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

----

 

ANU/PKV/PLM/DL


(Release ID: 2002415) Visitor Counter : 103