குடியரசுத் தலைவர் செயலகம்

37-வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளாவை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 02 FEB 2024 5:40PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் சூரஜ்குண்ட் என்னுமிடத்தில் இன்று (02.02.2024 37-வது சர்வதேச கைவினைப்பொருட்கள் மேளாவை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளா, நமது கலாச்சார பன்முகத்தன்மையின் கொண்டாட்டமாகும் என்று கூறினார். இந்தக் கண்காட்சி நமது பாரம்பரியம் மற்றும் புதுமையின் கொண்டாட்டமாகும். நமது கைவினைஞர்களை கலை ஆர்வலர்களுடன் இணைக்க இது ஒரு சிறந்த தளமாகும். இந்தக் கண்காட்சி ஒரு கலைக் கண்காட்சி மற்றும் வணிக மையமாகும்.

கலை மற்றும் கைவினை எல்லைகளைக் கடந்து புரிந்துணர்வுக்கான பாலங்களை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் மனிதகுலத்தின் படைப்பு தூதர்கள் இந்த ஆண்டு மேளாவின் பங்குதாரர் மாநிலமான குஜராத் மிகவும் வளமான கலைப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளாவில் வடகிழக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகம் கலாச்சார பங்குதாரராக இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

நமது நாட்டின் கலை மரபுரிமையை பாதுகாத்த கைவினைஞர்களை குடியரசுத்தலைவர் பாராட்டினார். கைவினைஞர்களும் சிற்பிகளும் களிமண்ணிலும் கல்லிலும் உயிரை வடிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். ஓவியர்கள் துடிப்பான தோற்றமளிக்கும் வண்ணங்கள் மூலம் படங்களை உருவாக்குகிறார்கள். கைவினைஞர்கள் பல்வேறு உலோகங்கள் மற்றும் மரம் போன்ற திடப்பொருட்களிலிருந்து அற்புதமான வடிவங்களையும் உருவாக்குகிறார்கள். நெசவாளர்கள் ஜவுளி மற்றும் ஆடைகளில் அற்புதமான அழகை உருவாக்குகிறார்கள். இத்தகைய கைவினைஞர்கள் இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை உருவாக்கியவர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்துள்ளனர். இன்றைய கைவினைஞர் சகோதர சகோதரிகள் நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த ஆண்டு மேளா நடத்துவதற்கான பங்குதாரர் நாடாக தான்சானியா உள்ளது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தான்சானிய நடனம், இசை மற்றும் உணவு வகைகளை வெளிப்படுத்த இது ஒரு அற்புதமான மேடை என்று கூறிய அவர், இந்தியாவிற்கும் கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரைக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு இடையேயான தொடர்பின் காரணமாக சில இந்திய தாக்கத்தையும் இதில் நாம் காணலாம் என்று கூறினார். இந்த மேளாவில் தான்சானியா பங்குதாரர் நாடாக பங்கேற்பது ஆப்பிரிக்க யூனியனுடனான இந்தியாவின் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

----

(Release ID: 2001950)

ANU/AD/PKV/KPG/KRS



(Release ID: 2002024) Visitor Counter : 68